பங்களா கொட்டா
பங்களா கொட்டா, ஆரூர் பாஸ்கர், அகநாழிகை பதிப்பகம், பக். 128, விலை 130ரூ. சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரிக்கு கட்ட விரும்பும் ஞானசேகர் என்பவரின் கனவையும், அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் விவரிக்கிறது, இந்த நாவல். தஞ்சை மண்ணின் பின்னணியில் நிகழ்கிறது இந்தக் கதைக்களம். கதையின் ஊடாக அந்நிலத்தின் ஜாதியக் கட்டமைப்பையும், விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், குடும்ப உறவுக்குள் இருக்கும் அன்பையும், பிணக்குகளையும், மனிதர்களின் குணாதிசயங்களையும் விறுவிறுப்பாக கூறிக்கொண்டே செல்கிறது இந்நாவல். […]
Read more