புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

முகமறை

முகமறை, அகத்தியா, இனிய நந்தவனம், விலை 80ரூ. சாதாரணங்களின் பரவசம் ‘சமையலறைப் பாத்திரங்களையும் கழிவறைச் சாதனங்களையும் கழுவி முடித்த பின் அவளுக்குத் தரப்பட்டது தனித்தம்ளரில் தேநீர்.’ என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நுல் இது. இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர். நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more