நை தாலிம் புதுமைக்கல்வி

நை தாலிம் புதுமைக்கல்வி, மார்ஜோரி சைக்ஸ், ஜீவா, இயல்வாகை வெளியீடு, பக். 128, விலை 125ரூ. காந்தி, ரவீந்திரநாத் தாகூரைப் பின்பற்றி, நை தாலிம் என்ற, புதுமைக் கல்வியை புகட்டியவர், மார்ஜோரி சைக்ஸ். காந்தி தன் குந்தைகளை, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து அடிமையாக்க விரும்பாமல், சுதந்திரக் கல்வி கற்க அனுமதித்தார். இந்த நூலில், மார்ஜோரியின் நை தாலிம் கல்வி பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

மண்ணின் மரங்கள்

மண்ணின் மரங்கள், கா. கார்த்திக் தமிழ்தாசன், இயல்வாகை வெளியீடு, பக். 60, விலை 75ரூ. நீர் நிலை, மரங்களை அழித்து, நகரம் நிர்மாணிக்கப்படுகிறது. சாலை ஓர நிழலுக்காக, விரைவில் வளரும், வெளிநாட்டு மரங்கள் நடப்படுகின்றன. நாட்டு மரங்களை நம்பி வாழ்ந்த உயிரினங்கள், உணவு கிடைக்காமல் அழிகின்றன. இதனால், மகரந்த சேர்க்கையின்றி, காய்கறி, பழங்களும் அருகி, உயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், காற்று, மழை, வெயிலை தாங்க பழக்கமில்லாத, அயல் மரங்களும் மடிகின்றன. இதை விரிவாக பதிவு செய்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

நிலைத்த பொருளாதாரம்

நிலைத்த பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா, தமிழில் அ.கி. வேங்கட சுப்பிரமணியம், இயல்வாகை வெளியீடு, பக். 160, விலை 200ரூ. நிலைத்த பொருளாதாரம் என்னும் முற்போக்கு சிந்தனை நூல்,ஜே.சி.குமரப்பாவின் சிறைப்படைப்பு. இயந்திர மயமாதல், முதலாளித்துவம், உலக மயமாதல் என்னும் செயல்பாடுகள் வேகமாக பரவிய போது, அதை கேள்விகளுக்கு உட்படுத்தி, அதன் எதிர்கால தாக்கம் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார். பன்மயம் என்பது மாறி, ஒருமயமாகும் போது ஏற்படப்போகும் விளைவுகளை ஆராய்ந்து, காந்தியின், கிராம பொருளாதாரத்தின் நன்மைகளையும் அலசுகிறது. இக்காலத்திற்கு அவசியமான நூல். நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

கல்வியில் வேண்டும் புரட்சி

கல்வியில் வேண்டும் புரட்சி, வினோபா, தமிழில் அருணாச்சலம், இயல்வாகை வெளியீடு, பக். 48, விலை 30ரூ. எழுத்தை கற்றுக் கொள்வதல்ல கல்வி. சத்தியம், அன்பு போன்ற குணங்களை போதித்து, அதை வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்க வலியுறுத்துவதே சிறந்த கல்வி. இதை வினோபா விளக்குகிறார். கட்டாயக் கல்வி, சிந்தனை மற்றும் படைப்பாற்றலை கொன்றுவிடும் என வலியுறுத்துகிறார். அதற்கு மாறாய், ஆதாரக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார். கல்வி புரட்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும், இது அற்புதமான கையேடு. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more