ஜீவா
ஜீவா, தி.வெ.ரா., அருணா பதிப்பகம், விலைரூ.200. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்தின் வாழ்க்கையை மேடையில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாடக நுால். அவர் மறைந்தபோது, தலைவர்கள் வழங்கிய இரங்கல் செய்தியுடன் முதல் காட்சி துவங்குகிறது. ஐம்பதாம் காட்சியில் ஜீவாவின் மகள் குமுதாவின் அரவணைப்பில் உயிர் பிரிவது போல் காட்சியாக்கப்பட்டுள்ளது. இடையில் 48 காட்சிகளிலும், அவரது வாழ்க்கை வரலாறு பின்னோக்கு உத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. நாடக பாத்திரங்கள், உண்மை மாந்தர்கள் என்ற காரணத்தால், உரையாடலில் அந்த காலத்தில் பேசிய மொழிநடையை அப்படியே வழங்கியுள்ளார். ஜீவா […]
Read more