ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், வெ. இறையன்பு, ஐ.எஸ்.ஏ., நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 221, விலை 140ரூ. எழுத்தாலும், பேச்சாலும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வரும் இந்நூலாசிரியர், பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர். இவரது இந்நூல் இதுவரை 6 பதிப்புகளைக் கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்து போதிய விபரங்கள் இல்லாததால், இத்தேர்வில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. […]
Read more