வந்தாராங்குடி
வந்தாராங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி, சென்னை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு வீடு வாசல் நிலபுலம் எல்லாம் தந்துவிட்டு, வேறுவேறு ஊர்களில் குடியேறி வந்தாரங்குடியாய் வாழ நேர்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அப்படியே அசலாய்ப் படம் பிடித்திருக்கிறது கண்மணி குணசேகரனின் இந்த நாவல். குருவிகளின் சிலும்பல்கள், கொட்டப்புளிகளின் கெக்களிப்புகள் இணைகளோடும் குஞ்சுகளோடும் கூடுகள் தோறும் விடியல் ஒலிகள், ஏகத்துக்குமாய் பச்சைப் பசேல் என்று விரிந்த கம்மங்கொல்லைகள், தாய்மடி போல் இம்மண், உயிர்களை ஊட்டி வளர்க்கும் பரிவு-இந்த அறிமுகத்தோடு வேப்பங்குறிச்சி கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். […]
Read more