கனவு சினிமா

கனவு சினிமா, க. மணிகண்டன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 128, விலை 100ரூ. ஒரு உதவி இயக்குநரின் அனுபவங்களின் பதிவாக மட்டும் நில்லாமல், சினிமா இயக்குநராக வேண்டும என்ற கனவோடு வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தரும் அனுபவப்பாடமாகவும் இந்நூலைத் தந்துள்ளார் நூலாசிரியர். வாய்ப்புக்காக பல இயக்குநர்களைத் தேடிப் போனதை, கேட்டறிந்த உண்மைகளை, கண்டுணர்ந்த அனுபவங்களை கனவு சினிமாவாக பதிவு செய்துள்ளார். வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தைத் தர கற்பனை கலந்திருக்கிறார். அதுதானே சினிமா. சினிமாவை சுவாசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல். நன்றி: குமுதம், 3/8/2015.   […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. இலக்கியங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் வடிப்பதில் புகழ் பெற்ற மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் கொண்ட நூல் கயல் பருகிய கடல். இதில் மாலன் முக்கியமாக ஆராய்ந்துள்ள விஷயம், தமிழில் வெளியான முதல் சிறுகதை எது? அதை எழுதியவர் மகாகவி பாரதியாரா? அல்லது வ.வே.சு. அய்யரா? தமிழ் இலக்கியவாதிகள் நீண்ட காலமாக சொல்லி வருவது, தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு. அய்யர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்பதாகும். […]

Read more