எனக்குள் எம்.ஜி.ஆர்.
எனக்குள் எம்.ஜி.ஆர்., காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், விலை 250ரூ. சிலர் எதை எழுதினாலும் அது ரஸமாகத்தான் இருக்கும். வேறு மாதிரி அவர்களால் எழுதவே முடியாது. அந்த வகையைச் சேர்ந்தவர் மறைந்த காவியக் கவிஞர் வாலி. தமக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நிலவிய நெருக்கத்தை சுவைபட எழுதியிருக்கிறார் இந்தக் கட்டுரைகளில். நல்லவன் வாழ்வான் படத்துக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்து அதற்கு அண்ணாவும் ஓ.கே. சொன்னதுபோது தாம் ஏழுமலையானுக்கு நேர்ந்து கொண்டபடி திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்தாராம் வாலி. […]
Read more