செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள்

செம்பியன்மாதேவி கலைக்கோவில்கள், முனைவர் கோ. எழில்ஆதிரை, இயல்வெளியீடு, விலை 400ரூ. தமிழகத்து வரலாற்றில் ஈடு இணையற்ற கலைத்தொண்டு ஆற்றிய பெண்மணி செம்பியன்மாதேவியாவார். இவர் கண்டாதித்த சோழனின் மனைவியும், உத்தமசோழனின் தாயுமாவார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் காளத்தி மலை முதல் நாகப்பட்டினம் வரை புகழ்வாய்ந்த பாடல் பெற்ற தலங்களைப் புதியதாகக் கட்டி அவற்றில் எழிலார்ந்த செய்யுத் திருவுருவங்களை வீதி உலாவிற்காக செய்தமைத்து ஏராளமான கொடைகளை அளித்து தனக்கென ஒரு மாபெரும் வரலாற்றையே தோற்றவித்த பெண்மணியாவார். அவர் கோனேரிராசபுரத்தில் செய்த பணிகளை விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறது […]

Read more

செம்பியன்மாதேவி கலைக்கோயில்

செம்பியன்மாதேவி கலைக்கோயில், கோ. எழில் ஆதிரை, இயல், விலை 70ரூ. இன்றும் வாழும் மாதேவி! பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பு, உச்சரிக்கும்போதே உள்ளம் பரவசமடையும் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனின் மனைவியாக, உத்தம சோழனின் தாயாக, முதலாம் இராசராச சோழனின் பாட்டியாக, பராந்தகன், சுந்தரசோழனின், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசோழன், முதலாம் இராசராசன் ஆகிய ஆறு மன்னர்களின் ஆட்சிவரை இறைப் பணியிலும் கலைப்பணியிலும் ஈடுபட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகள் வாழ்ந்து புகழ்பெற்றவர் செம்பியன் மாதேவி. அவரின் முழு வாழ்க்கை […]

Read more