ஜீவாவின் சமுதாயத் தொண்டு
ஜீவாவின் சமுதாயத் தொண்டு, த. காமாட்சி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ப. ஜீவானந்தம். ஏழை, பாட்டாளி மக்களின் தலைவர் அவர். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சாதிமுறையைச் சாடியவர். சிறந்த காந்தியவாதி. பொதுவுடைமைவாதி. தொழிலாளர்களின் உண்மைத்தலைவர். த. காமாட்சியின் ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஜீவா ஆற்றிய தொண்டு, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு, கம்யூனிச கோட்பாட்டில் அவரது உறுதிப்பாடு ஆகிய கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]
Read more