சொட்டாங்கல்

சொட்டாங்கல், தமிழச்சி தங்கபாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 100ரூ. இந்து தமிழின் ஓர் அங்கமான ‘காமதேனு’ வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நவீன வாழ்க்கையில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு நிற்கும் பால்யத்தின் நினைவுகள் இவை. அழியும் நிலையிலிருக்கும் கிராமத்து விளையாட்டுகளையும் நினைவிலிருந்து அகலாத இளம்பருவத் தோழிகளையும் பற்றிய கட்டுரைகள். தமிழச்சி தங்கபாண்டியனின் கட்டுரைகள் கற்பனைகளிலிருந்து அல்ல, நினைவுகளிலிருந்து எழுதப்படுபவை என்பதற்கு இத்தொகுப்பு ஓர் இலக்கியச் சாட்சி. நன்றி: தமிழ் இந்து, 23/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு, தமிழ்ச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002, விலை 80 ரூ. “நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். சுட்டு வைத்த கனங்கிழங்கு வாசமும், குழிப்பணியாரத்தின் மென்மையும், காத்தாடி பார்க்கின்ற பரவசமும், சமயங்களில் சுடுமணல் பொறுக்காத தவிப்பும்… என்று தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப் போல் அடம்பிடிக்கவும் கற்று வைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அழகான வடிவமைப்பு, அரிய புகைப்படங்கள், மனித நேயமிக்க தகவல்களுடன் கூடிய இந்த நூல் ஒரு வரலாற்றுக் […]

Read more