இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய் கதைகள்,-தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.496, விலை ரூ.500. உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள். முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் […]

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. பாலியல் வன்புணர்வு, காதல் என சீனாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளை குறித்து வானொலி தொகுப்பாளினியான சின்ரன் தன் நிகழ்ச்சியின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சீனப் பெண்களின் நிலை குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் ஜி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, விலை 280ரூ. சீனாவில் வானொலி தொகுப்பாளினியாகப் பணியாற்றியவர், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், ஓரினச் சேர்க்கை, காதல், ஏமாற்றம் என்று பல வரம்புகளில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்களைச் சந்தித்து அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளைத் திரட்டிக் கொடுத்து இருக்கும் தகவல்கள், ஆச்சரியமிக்க அதிர்ச்சிகரமானவை. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more