வள்ளுவர் முப்பால் அறத்துப்பால்

வள்ளுவர் முப்பால் அறத்துப்பால், உரையும் உரைவும், உரையாசிரியர் தி.முருகரத்தனம், தமிழ்ச்சோலை வெளியீடு, பக். 145, விலை 100ரூ. உலகம் போற்றும் அறநூலாம் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். நாட்டின் தேசிய நூலாக அறிவிப்பதற்குத்தகுதியுடைய திருக்குறளை, பலரும் தத்தம் போக்கில் வெளியிடுகின்றனர். இந்நூலை வெளியிட்டுள்ள இந்த உரையாசிரியர், முதல் நாற்பது குறட்பாக்களை (பாயிரம்) வள்ளுவர் இயற்றவில்லை என கருதுகிறார். திருக்குறளை முப்பால் என்றுதான் கூற வேண்டும் என்றெண்ணும் ஆசிரியர், காரணம் கூறாமல் தம் விருப்பப்படி குறட்பாக்களை புதிய முறையில் வரிசைப்படுத்தி எண்கள் கொடுத்துள்ளார். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு […]

Read more