தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்கள் கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 242, விலை 220ரூ. மக்களுக்குப் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் இந்நூலாசிரியர், உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த இந்நூலை வெளியிட்டுள்ளார். மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு நடத்தும் ஆட்சி மக்களாட்சி. இது கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்த வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதே, இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74-ஆவது திருத்தங்கள். இதன்மூலம், அரசின் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து அடிமட்ட நிர்வாகம் வரையிலான அதிகாரப் பரவல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
Read more