அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், பக். 704, விலை 600ரூ. அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர் தாயம்மாள், தமிழகத்தில், பல அவ்வையார்கள் விட்டு சென்ற அறநுால் பதிவுகள் அனைத்திற்கும் விளக்கமாக இந்த நுாலை எழுதியிருக்கிறார். அவ்வை என்ற சொல் வயதில் மூத்தவள், தமக்கை, பெண் துறவி ஆகியவற்றை குறிக்க வழங்குகிறது. சங்க கால அவ்வை தொடங்கி, பல அவ்வையார் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காதல் பாடல்களை அவ்வை பாடியதாக குறிக்கும் ஆசிரியர் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ. பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை […]

Read more

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, பக். 704, விலை 300ரூ. கைம்பெண் நோன்பின் கடுமையை விட உடன்கட்டை ஏறுதல் உயர்ந்ததோ? சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுயக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார […]

Read more