தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்
தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ப.ஞானமணி, காவ்யா, விலைரூ.350 தொல்காப்பியத்தில் யாப்பியல் கோட்பாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நுால். ஆய்வில் அசை, சீர் பற்றிய அரிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியரின், 20 வண்ணங்கள் மற்றும் அவிநயனார் கூறும், 100 வண்ணங்களையும் எடுத்துக் காட்டி விவரித்திருப்பதோடு, பண்டைய இலக்கண ஆசிரியர்களின் ஏற்புடைக் கருத்துகளையும், முரண்களையும், மறுப்புகளையும் முன்வைத்து சங்கப்பாடலில் எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பது சிறப்பு. வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திர, நலிபு ஆகிய எழுத்தடிப்படை வண்ணங்கள், […]
Read more