போராளிகள்

போராளிகள், மு. செந்திலதிபன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 90ரூ. சமுதாய நலனுக்காக, தம்மை அர்ப்பணித்து கொள்பவர்களையே, போராளிகள் என்றழைக்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலை, பெண்ணுரிமை, கல்வி உரிமை என, சமுதாயத்திற்காக, போராடுபவர்கள் வெகுசிலரே. அந்த வகையில் இந்த நூலில் ஒன்பது போராளிகளின் சமகால வரலாறுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து, காந்திய வழியில் போராடி, தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூச்சி. மணிப்பூரில் உண்ணாநிலை அறப்போரில், ஏறக்குறைய 13 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். […]

Read more