தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்
தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும், கி.இலக்குவன், அலைகள் வெளியீட்டகம், விலை 140ரூ.
இந்தியாவின் தலை போல அமைந்து, 70 ஆண்டுகளாகத் தீராத தலைவலியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினை பற்றி, ஆதி முதல் தற்போது 370 – வது பிரிவு ரத்து செய்யப்பட்டது வரையில் நடைபெற்ற வரலாற்றை இந்த நூல் விளக்கமாகத் தருகிறது. முதல் நூற்றாண்டு முதல் அங்கு நடைபெற்ற படையெடுப்புகளும், 1846 -ம் ஆண்டு டோக்ரா மன்னர் குலாப் சிங்கிடம் 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீர் மாநிலம் ஆங்கிலேயர்களால் விற்கப்பட்டது என்ற வியப்பான செய்தி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன.
காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் அமைப்புகள் எவை, எவை என்ற விவரம், ஆசாத் காஷ்மீர் பற்றிய தகவல்கள், இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர்கள் தொடர்பான செய்திகள், காஷ்மீர் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, இந்துத்துவ அரசியல் கண்ணோட்டம் ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பேச்சு வார்த்தை முக்கியம் என்பதையும் இந்த நூல் சுட்டிக் காட்டி இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள உதவும் ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 4/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818