வியாசர் அறம்
வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன்பேங்க், விலை 200ரூ.
வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலக் கொண்டு இருக்கும் மகாபாரதத்தில் இருந்து அறம் சார்ந்த சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ருசிகரமாகப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார், ஆசிரியர்.
மகாபாரதத்தில் வியாசர் கூறி இருக்கும் கதைகளில், 60 கதைகள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் முகப்பு வாசகம் கொடுத்து இருப்பது, அந்தக் கதையைப் படிக்கத் தூண்டும் அம்சமாக அமைந்து இருக்கிறது. 60 கதைகளையும் எளிய நடையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் தந்து இருப்பதோடு, அந்தக் கதைகளின் முடிவில் அந்தக் கதைகள் சொல்லும் சாராம்சம் என்ன என்பதும், தனியாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அவற்றுடன் ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான திருக்குறளும் அந்தக் குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கமும் கொடுத்து இருப்பது, இந்த நூலுக்கு ஒரு நிறைவைத் தருகிறது. இந்த நூலில் தேர்ந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள 60 கதைகளும் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.
நன்றி: தினத்தந்தி, 4/12/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029964.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818