உச்சியிலிருந்து தொடங்கு
உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை175ரூ.
தினந்தோறும் காலையில் எந்தச் செய்தித்தாளைப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு தற்கொலைச் செய்தி இடம் பெற்றுவிடும். அண்மையில் ‘புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்கொலை செய்த செய்திகளைப் படித்தபோது நெஞ்சம் பதறியது.
மனிதன் என்றால் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் இதைப் போராடி வெற்றிக்கொள்வதே வாழ்க்கை. தற்கொலை எண்ணத்தில் இருந்து மனித குலம் மீட்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான, பேச்சாளருமான வெ.இறையன்பு இந்த நூலை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக அருமையான சான்றுகளுடன் எழுதியுள்ளார்.
இந்த நூலைப் படித்து முடித்தவர்கள், நம்பிக்கையோடு வாழ்வில் நடைபோடுவார்கள் என்பது திண்ணம். இது தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026648.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினத்தந்தி, 21/2/2018.