வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை
வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ.
தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன.
வென்றால் தான் மக்கள் சேவையா?, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா?, அறிவியலா அழிவியலா?, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை எதிரொலித்துள்ளன.
நன்றி தி இந்து, 10/2/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818