தாவரத் தரகன்

தாவரத் தரகன் (கட்டுரைகள்),  ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், பக்.200, விலை ரூ.200. தினமணி நாளிதழ், ரெளத்திரம், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் கட்டுரை, வேலிகாத்தானை ஒழிப்பது பற்றிய தாவரத் தரகன். கட்டுரை, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் செல்லும் வாகனங்களைப் போன்று, அரசுப் பள்ளிகளிலும் பள்ளி வாகனங்கள் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் கட்டுரை, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தலுக்காகச் செய்யும் செலவுகளைப் பற்றிச் சொல்லும் கட்டுரை என பலவிதமான விஷயங்களை […]

Read more

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ. தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன. வென்றால் தான் மக்கள் சேவையா?, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா?, அறிவியலா அழிவியலா?, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை […]

Read more

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு

பாட்டாளிச் சொந்தங்களே! தன் வரலாறு,  மருத்துவர் ச.இராமதாசு, வழுதி வெளியீட்டகம், பக்.240, விலை ரூ.200. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ‘கல்கி’வார இதழில் தொடராக எழுதியவற்றின் நூல் வடிவம் இது. திண்டிவனத்துக்கு அருகில் உள்ள கீழ்சிவிரி கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆதி திராவிடர் காலனியில் இருந்த பள்ளியில் படித்தது, ஆறாம் வகுப்பில் இருந்து சென்னையில் உள்ள அக்கா வீட்டில் தங்கிப் படித்தது, ஒரு செட் உடையைத் தினமும் துவைத்துப் போட்டு அணிந்தது, தினமும் 6 கி.மீ. நடந்து […]

Read more

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும்

மஹா பெரியவாளும் ஏகாம்பரம் ஆகிய நானும், எஸ். ஏகாம்பரநாதன், சைதன்ய மஹா பிரபு நாமபிக்ஷா கேந்திரா, சென்னை, பக். 456, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-305-8.html குழந்தை பருவத்திலிருந்தே ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவருடன் பேசிப் பழகி அவரது அன்பைப் பெற்றவரான இந்நூலாசிரியர், 1978லிருந்து 1983 வரை சுமார் 5 வருடங்கள் மஹா பெரியவருடன் சுமார் 5000 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற யாத்திரையில் பங்கேற்றவர். காஞ்சிபுரத்திலிருந்து பூனாவிற்கு அருகிலுள்ள சதாராவுக்கு கால்நடையாகவே இந்தக் கடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. […]

Read more