வளர்பிறைகளும் தேய்பிறைகளும்
வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ.
சிலரது வாழ்க்கை வளர்பிறை போல வளரும். சிலரது வாழ்க்கை தேய்பிறைபோல தேயும். இதற்கு என்ன காரணம் என்பதை இஸ்லாமியப் பின்னணியில் விளக்கும் சமூக நாவல்.
நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய பனையடியூரில் இஸ்லாம் எவ்வாறு வேரூன்றி செழித்து வளர்ந்தது என்பதை இப்பகுதி மக்களின் கலாச்சார பண்பாட்டு நோக்கில் பதிவு செய்யப்பட்ட நாவல் இது.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 11/1/2017.