வட்டியை ஒழிப்போம்
வட்டியை ஒழிப்போம், டாக்டர் எம். உமர்சாப்ரா, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பக். 60, விலை 40ரூ.
வட்டி என்பது நீதிக்கும் மானுட உணர்வுக்கும் எதிரானது. வாழ்வின் நிம்மதியை அழிக்கக்கூடியது. எனவே வட்டியை ஒழிப்பதற்கான மாற்று ஏற்பாடாக லாப, நஷ்டத்தில் பங்கு வகிக்கும் வட்டியில்லா வங்கி முறை பற்றி சுருக்கமாக அதேசமயம் நிறைவாக விளக்கும் நூல்.
நன்றி: குமுதம், 12/10/2016.
—-
காக்க காக்க உடல் நலம் காக்க, வானதி பதிப்பகம், விலை 100ரூ.
காய்ச்சல் முதல் இருதய செயலிழப்பு வரை பலவித நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. இதற்கு சிகிச்சைகள் என்ன, நோய்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதை எல்லாம் விரிவாகச் சொல்கிறார் டாக்டர் பெ. போத்தி.
நன்றி: தினத்தந்தி, 28/9/2016.