அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்
அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 224, விலை 270ரூ. ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட கனிவையும்தான் நாம் காட்ட வேண்டும் என்பதை அழகாக, வலியுறுத்தியுள்ளார். இன்றைய கல்வி முறையில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிடும் ஆசிரியர், இன்றைய குழந்தைகள் பையிலும் மனதிலும் சுமையைச் சுமப்பவர்களாகவே ஆகிவிட்டார்கள் என்கிறார். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிடுவத அக்குழந்தையின் தன்னம்பிக்கையை அழித்துவிடும். படி படி என்று குழந்தைகளை டென்ஷன் ஆக்கி பெற்றோரும் டென்ஷன் ஆவது மிகவும் தவறு. குழந்தைகளிடம் நாம் கொடுக்கும் உறுதிமொழியை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல கருத்துகள் இளம் பெற்றோர் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பெற்றோருக்கு மட்டுமல்லாது டீன் ஏஜ் பருவத்தினர், ஆசிரியர்கள் போன்ற பிரிவினருக்கும் யோசனைகள் கூறப்பட்டுள்ளன. குழந்தைகளைப் பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html
நன்றி: தினத்தந்தி, 7/7/13.
—-
காற்றின் கையெழுத்து, பழநி பாரதி, விகடன் பிரசுரம், பக். 256, விலை 130ரூ.
ஒரு மனிதனின் வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது அவனுடைய குழந்தைப் பருவமே. அத்தகைய குழந்தைப் பருவத்திலுள்ள சின்னஞ்சிறு மனிதர்களிடம் நாம் எப்படிப் பழக வேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் பயிற்றுவிப்பது எப்படி? அவர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்பது எப்படி? என்பன போன்ற பல விஷயங்களை எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். குழந்தைகளிடம் அதிகாரத்தைவிட அன்பையும், கண்டிப்பைவிட கவனிப்பையும், கடுமையைவிட கனிவையும்தான் நாம் காட்ட வேண்டும் என்பதை அழகாக, வலியுறுத்தியுள்ளார். இன்றைய கல்வி முறையில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்று குறிப்பிடும் ஆசிரியர், இன்றைய குழந்தைகள் பையிலும் மனதிலும் சுமையைச் சுமப்பவர்களாகவே ஆகிவிட்டார்கள் என்கிறார். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிடுவத அக்குழந்தையின் தன்னம்பிக்கையை அழித்துவிடும். படி படி என்று குழந்தைகளை டென்ஷன் ஆக்கி பெற்றோரும் டென்ஷன் ஆவது மிகவும் தவறு. குழந்தைகளிடம் நாம் கொடுக்கும் உறுதிமொழியை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல கருத்துகள் இளம் பெற்றோர் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பெற்றோருக்கு மட்டுமல்லாது டீன் ஏஜ் பருவத்தினர், ஆசிரியர்கள் போன்ற பிரிவினருக்கும் யோசனைகள் கூறப்பட்டுள்ளன. குழந்தைகளைப் பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும். நன்றி: தினத்தந்தி, 7/7/13. காற்றின் கையெழுத்து, பழநி பாரதி, விகடன் பிரசுரம், பக். 256, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-483-1.html
அன்றாட சமூக நிகழ்வுகளில் இசை கேடான எத்தனையோ அவலச் செய்திகளை நாம் நாளிதழில் கண்டு மனம் வெதும்புகிறோம். கவிஞர் பழநி பாரதி அச்செய்திகளின் பாதிப்பையும் அவற்றின் மீதான தமது விமர்சனங்களையும் அருமையான இலக்கியப் பதிவாக எழுத்தில் இதில் வடித்திருக்கிறார். நசிந்து வரும் வேளாண்மை, நச்சுக் கலந்த குடிதண்ணீர், பெண்ணுக்கு அழகு கறுப்பா, சிவப்பா, அறிவா? என வாழ்வியலின் சகல முனைகளையும் அலசி ஆராயும் 52 கட்டுரைகளின் இடையே ஆங்காங்கு தாம் ரசித்த பல கவிஞர்களின் கவிதைகளையும்எடுத்தளித்துள்ளார். நன்றி: தினமலர், 7/7/13