இந்திய ஒருமைப்பாடு
இந்திய ஒருமைப்பாடு, குறித்தலை பாலா, பாலா கடம்பனேஸ்வரர் பதிப்பகம், 58, ஆர்.எம்.ஆர்.இல்லம், வைகை நல்லூர், குளித்தலை 639104, விலை 50ரூ.
அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் குணம், சாதி சமய வேறுபாடற்ற நிலை என ஒருமைப்பாட்டிற்கு உரம் சேர்க்கும் கருத்துக்களுடன் நேர்மை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தன் கையே தனக்குதவி போன்ற கருத்துக்களை 10 சிறுகதைகள் மூலம் நயம்பட தந்துள்ளார் ஆசிரியர்.
—-
குழலின் மொழி, நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட், 2/4, டாக்டர் ரங்கா ரோடு, மைலாப்பூர், சென்னை 4, விலை 40ரூ.
பெண் கவிஞர்களுக்கு முன்னோடியான மதிஒளி சரஸ்வதி எழுதிய இந்நூலில் சிறந்த கவிதைகள் அடங்கியுள்ளன. இது கவிஞர் மதிஒளி எழுதிய நூல் என்று சொன்னாலே போதும். அது மணம் மிக்க மல்லிகை மலர் என்பதை அனைவரும் அறிவர்.
—-
அக்குபஞ்சர், டாக்டர் எஸ்தர் பாரி, எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ.
மாற்று மருத்துவத்தில் முக்கியமானது அக்குபஞ்சர் எனப்படும் சீன மருத்தவமாகும். மருந்து மாத்திரை இன்றி சிறு புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்துவதுதான் இதன் சிறப்பு அம்சம் ஆகும். ஆசிரியர் இந்த புத்தகத்தில் இதன் அடிப்படை விஷயங்கள் விளக்குவதுடன் முக்கியமான புள்ளிகள் மற்றும் அதன் மூலம் தீரும் நோய்கள் குறித்தும் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/2/2014.