இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்.
சூழலியல் எழுத்தாளர்கள் சு. தியடோர் பாஸ்கரன், புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. தமிழகத்தில் சுற்றுச்சூழலில் மீதான ஆர்வம் பரவலாக, இந்தக் கட்டுரைகளும் ஒரு காரணம். நன்றி: தி இந்து, 22/4/2014.
—-
அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி.
மூன்றாம் உலக நாடுகளை மிரட்ட வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதம் விதைகள் என்பது போன்ற அதிர்ச்சியளிக்கும் தகவலின் பின்புலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். சூழலியல் சொல்லாடலில் தமிழ் மொழியின் வளத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகப் பாமயனின் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. நன்றி: தி இந்து, 22/4/2014.