காஞ்சிமகான் மகிமை

காஞ்சிமகான் மகிமை, சாரதா விஸ்வநாதன், விஜயா பப்ளிகேஷனஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே.சாலை, வடபழனி, சென்னை 26, விலை 70ரூ.

காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியாரை சந்தித்த தலைவர்களும், பிரமுகர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் பற்றிக் கூறும் விவரங்கள் அடங்கிய புத்தகம். சந்நியாசிகள் என்றாலே பிடிக்காதவர், சுப்பிரமணியசுவாமி. அவர் எப்படி பெரியவருக்கு பக்தரானார் என்பதை ஒரு கட்டுரை விவரிக்கிறது. அது மட்டுமல்ல, நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியும், காஞ்சிப் பெரியவரை இந்திராகாந்தி சந்தித்தபோது என்ன பேசினார் என்பது பற்றியும், பலரும் அறிந்திராத அபூர்வமான தகவல்களை சுப்பிரமணிய சுவாமி கூறுகிறார். ஆன்மிகவாதிகள் மட்டுமல்ல, அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.  

—-

 

சாயிபாபா சரித்திரம், கிரி டிரேடிங் ஏஜென்சி, 134, டி.எஸ்.வி. கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ.

கடவுள் அவதாரம் என்று பக்தர்களால் போற்றப்படும் புட்டபர்த்தி சாயிபாபாவின் வரலாற்றைக் கூறும் புத்தகம் இது. 1926ம் ஆண்டு நவம்பர் 23ந்தேதி அவர் பிறந்தது முதல், 2011ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி முக்தி அடைந்தது வரை அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும், நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எளிய நடையில் கே.எஸ். ரமணா இதை எழுதியுள்ளார். சாயிபாபாவின் இளம் பருவத்துப் படங்கள், நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 11/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *