துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள், முனைவர் நல்லூர் சா. சரவணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-8.html

நாகை வழக்கறிஞர் என்.பி. சுப்ரமணிய சர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை நா.சு.ராஜராம சர்மாவால் வெளியிடப்பட்ட (1914) நூலின் பதிப்பாக்கம் இது. உபநிஷதங்களின் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் பணியில், முனைவர் நல்லூர் சா.சரவணனின் பங்களிப்பு அதிகம். நான்கு வேதங்களுக்குள் காணப்படும் பன்னிரு உபநிஷதங்களையும் வேதங்களின் அடிப்படையில் உள்ளடக்கி வரிசைப்படுத்தி தொகுத்துள்ளது பாராட்டுக்குரியது. மேலும், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சுலோகங்கள் தமிழில் உள்ளது மகிழ்வளிக்கிறது. ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் சாராம்சமும் சுருக்கமாக இடம்பெற்றுள்ளது. நூறு ஆண்டுகளுக்குப் பின் புதிய பதிப்பாக உபநிடதங்கள் வெளிவந்துள்ளதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது. -ஜனகன்.  

 

ஓலைச்சுவடிகளில் தொடக்ககால தமிழ்க்கிறிஸ்தவ இறைநெறிப்பாடல்கள், டேனியல் ஜெயராஜ், ஆசியியல் நிறுவனம், சென்னை 119, பக். 194, விலை 200ரூ.

அச்சுப்பொறியை, முதன் முதலில் தமிழகத்திற்கு தந்த சீசன் பால்கு ஜெர்மன் நாட்டில் இருந்து வந்தவர். இவரும் குருண்டலர் என்பவரும் வந்து, தரங்கம்பாடியில் தங்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பும்போது, இறைவழிபாட்டிற்கு பாடல்களை எழுத வேண்டியதாயிற்று. அச்சுவடிகளை படித்தறிந்து, ஆசிரியர் மிகவும் பிரயாசையுடன் நூலாக உருவாக்கியிருக்கிறார். சீகன்பால்கு வந்த காலத்தில், இவர்கள் தமிற்கற்க உதவிய நபர் கணபதி என்பவர். சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்தில் அவர் லுத்தரன் திருச்சபை நெறிக்கு மாறியதும், பின்பு அவர் மனசஞ்சலப்பட்டு, தந் சொந்த சைவநெறிக்கு மாறியதால், அவரைப் பற்றிய செய்திகள் அதிகம் பின்னாளில் காணாமல் போனது என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழகமக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினால் மதம் மாறியவர்களை குலம் பூண்டவர்கள் என அழைத்த வழக்கமும், அன்றைய வாழ்வில் குடும்பத்தில் பெண்கள் எப்படி இருந்தனர் என்ற தகவல்களும், நூலின் முன்பகுதியில் தரப்பட்டிருக்கிறது. தொடக்கமில்லாதவர், அனாதி சொரூபம் கொண்டவர் என்ற வார்த்தைகள் கடவுளைக்குறிக்கும் வாசகங்களில் சில என்பது சுவடிப்பாடல் தரும் தகவல் கிறித்துவ மத தொண்டாற்றும் நூலாக இது மலர்ந்திருக்கிறது. நன்றி: தினமலர், 8/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *