காந்தி எனும் மனிதர்
காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதயா இலக்கியப் பண்ணை, விலை 100ரூ.
மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில்இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது, அவருடன் பழகியவர், இந்த நூலை எழுதிய திருமதி மிலி கிரகாம் போலக். “நான் அவரை (காந்தியை) எப்போதும் ஒரு மகாத்மாவாகவோ, புனிதராகவோ, நுட்பமான அரசியல்வாதியாகவோ அறிந்திருக்கவில்லை. அன்பும், மகத்தான கருணையும் நிறைந்த மனிதராகவே அவர் இருந்திருக்கிறார். இந்த மகத்தான மனிதரை வாசகர்களுக்கு கவனப்படுத்துவதே என் நோக்கம்” என இந்த நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியை திருமதி போலக். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.
—-
அப்துல்கலாம் வாழ்வும் வழிகாட்டலும், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ.
எளிமையான ஜனாதிபதி, அறிவியல் உலகம் வியக்கும் அற்புத விஞ்ஞானி, மாணவர்களுக்கு வழிகாட்டிய சிறந்த ஆசான் அப்துல்கலாம். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலான இதனை படிப்பவர்களை பல உயரங்களுக்கு உயர்த்தும் உந்து சக்தியாக நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.