கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், தோழமை வெளியீடு, சென்னை, விலை 150ரூ.

உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் டைரக்டர் பாலசந்தர். 100 படங்களை இயக்கியவர், புரட்சிகரமான கதைகளைத் துணிந்து படமாக்கியவர். ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். கமல்ஹாசனை பட்டை தீட்டியவர். ஒரு படத்தைப்போல இன்னொரு படம் இல்லாதபடி, விதம் விதமாகப் படங்களை எடுத்த திறமைசாலி. பாடல் காட்சிகளை படமாக்குவதில் புதுமையைப் பகுத்தியவர். அண்மையில் காலஞ்சென்ற பாலசந்தரின் நினைவாக இந்நூலை சேவியர் எழுதியுள்ளார். புத்தகம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியை பாலசந்தர் பேட்டி கண்டது (கேள்வி பதில்) புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது, ரசிகர்களுக்கு அரிய விருந்து. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.  

—-

தமிழ் நுங்கு, இராச. கலைவாணி, டாக்டர் க.அ. அருள்செங்கோர், ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ.

முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் அடங்கிய குழுவினர்களை கொண்ட ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சமுதாயத்துக்கு பயனுள்ள நூல்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது மற்றொரு பயனுள்ள நூலை தொகுத்து அளித்துள்ளது. தாலாட்டு பாடல்கள், அன்னம்மாள் எனும் அறியப்படாத கவிஞர், கற்பும் முல்லையும் உள்பட 58 தலைப்புகளில் பேராசிரியர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. ஆய்வு மாணவர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் எளிய நடையில் தொகுத்து சமுதாயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *