சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ.

ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.  

—-

 

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை சென்னை 18, விலை 110ரூ.

நெல் வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது. அந்த அளவிற்கு பள்ளு நூல்கள் அதிகம் காணப்படுகின்றன. பள்ளு நூல்கள் பெரும்பாலும் இறைவனுடன் தொடர்புபடுத்தியே பாடப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்த இலக்கியத் திரட்டில் 19 பள்ளு நூல்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆசிரியர். பெரும்பாலும் நாட்டுப்புறப்பாடல்களை மையமாக வைத்து அமைக்கப்பட்ட நூல். நாட்டுப்புறப்பாடல்களை விரும்பும் வாசகர்களுக்கு இந்நூல் நல்ல விருந்து.  

—-

 

அருள்மிகு ஆன்மிகம், காஜா ஷேக் முஹம்மது அப்துல் காதிர் ஷாஹ்வால், தமிழில்-நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம், அல்ஜாமிஅத்துல் அரபியா அர்ரஹ்மானியத்துல் ஆதிலியா, ரஹ்மானியா நகர், ராதாபுரம் 606707, விலை 250ரூ.

மங்களூரைச் சேர்ந்த காஜா ஷேக் முஹம்மது அப்துல் காதிர் ஷாஹ்வால் உருது மொழியில் எழுதப்பட்ட தஸவ்வுப் ரஹ்மானி என்ற நூலை அருள்மிகம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம். மனிதனை மனிதனாக வாழ வைக்கின்ற ஆற்றல் ஆன்மிகத்திற்கு உண்டு. தன்னை படைத்த இறைவன் யார் என்பதை இந்நூல் புரிய வைக்கிறது. இதனை ஆழ்ந்து படிப்போரின் உள்ளங்களில் ஆன்மிகப் பேரோளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும். இந்நூலில் தியாகத்தின் தத்துவங்கள், கலிமா தய்யிபாவின் (இறை விசுவாசம்) ரகசியங்கள், முகம்மது நபி (ஸல்) அவர்களின் மகத்துவங்கள், நப்ஸின் வகைகள், தொழுகை உள்ளிட்ட கட்டாய கடமைகள் போன்ற பல விஷயங்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,17/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *