பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், பாலசர்மா, டி.எஸ்.புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ. ராஜாஜி என்ற அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் தூய்மையும், நேர்மையும் முக்கியமானவை என்று கருதி, அதன்படியே நடந்தவர் ராஜாஜி. சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கின்றி வாழ்ந்து, வரலாற்றில் நிலைபெற்றவர். அவரது குணநலன்கள், சாதனைகள், அறிவுரைகள் என்று திரட்டித் தரப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது எப்பேர்ப்பட்ட தலைவர்களை நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று பெருமை ஏற்படுவது உண்மை.   —-   […]

Read more