ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்

ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம், டாக்டர் ஆர். சிவசக்தி வேலன், நர்மதா பதிப்பகம், 10, நானாதெரு, தி.நகர், சென்னை 17, பக். 216, விலை 80ரூ. திருவருட் பிரகாச வள்ளல் ராமலிங்க அடிகளால், 1851ல் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந்நூலை இயற்றியவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகண்ணுடைய வள்ளல் ஆவார். தமிழ்க் குரிசில் சீகாழிச் சம்பந்தனை (பக். 31) தெய்வமாக வழிபட்டு இயற்றப்பட்ட, ஒழிவில் ஒடுக்கம் விரித்த நூற்கெல்லாம் விதை (32) எனலாம். வடலூர் வள்ளலார் பதிப்பித்த பின், வேதாந்த அடிப்படையில் விளக்கவுரை […]

Read more

பள்ளு இலக்கியத் திரட்டு

பள்ளு இலக்கியத் திரட்டு, தே. ஞானசேகரன், சாகித்திய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடில்லி 110001, பக். 192, விலை 110ரூ. பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும் 96 பிரபந்தங்களுள் ஒன்ற பள்ளு இலக்கியம். நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது எனும் அளவுக்கு, உழவர்களின் பாடல்கள் ஏராளமாக உள்ளன. இந்நூலில் கடவுள் வணக்கம் மூத்த பள்ளிவரல் இப்படியாக பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல் என 48 உறுப்புகள் 14 வகைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. 19 பள்ளு நூல்களில் இருந்து […]

Read more