சமரன்
சமரன், ச. மோகனகிருஷ்ணன், தியாக தீபங்கள் வெளியீடு, பக். 600, விலை 400ரூ.
சரஸ்வதி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த வ. விஜயபாஸ்கரன் நடத்திய விமர்சன இதழே ‘சமரன்’ என்ற அரசியல் இதழாகும். 1962-64 வரை சுமார் இரண்டாண்டு காலம் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய அளவில் அரசியல் கட்சிகள் சந்தித்த சவால்கள், நீதிக்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் போன்ற மூத்த கட்சிகளுக்குள் நடந்த பிரச்னைகளை விமர்சித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் முன்வைத்த ‘சமரன்’ அன்றைய அரசியல் கட்சிகளால், கட்சித் தலைவர்களின் கண்டனத்திற்கு உட்பட்டது என்றாலும் கருத்துக்களத்தில் சமரசத்திற்கு இடம் கொடாமல் சமர்புரிந்தது. அப்படி சமரனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.