சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ.

சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் பய்னபெற முடியாது. இதற்கு விரிவான உரை வெளிவந்தால் சிறப்பு பெறும். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.  

—-

ஒரு விடியலும் சில பறைவைகளும், ஸ்ம்ரித்திராம், சிவாலயம் வெளியீடு, புதுச்சேரி, விலை 160ரூ.

கிராமிய பண்பாடு, கட்டுப்பாடு, பழக்கம், தலைமைக்குக் கட்டுப்படுவது போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *