சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ.

இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.  

—-

இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ.

தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை உணர்த்தும் 24 புத்தகங்களின் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.  

—-

பாப்லோ நெருதாவும் ஈரோடு தமிழன்பனும், ப. குணசேகரன், கவிதா வெளியீடு, விலை 120ரூ. வையகத்தை தன் எழுத்து ஆக்கத்தால் ஆட்கொண்ட உலக பெருங்கவிஞர் பாப்லோ நெருதா. இவரின் கவிதை வரிகளை மொழிபெயர்த்து தமிழ் இலக்கிய பிரியர்களுக்கு சுவைபட விருந்தளித்தவர் ஈரோடு தமிழன்பன். இவ்விரு கவிஞர்களின் கவிதை வரிகளில் கலந்திருக்கும் வார்த்தை ஜாலங்களை ஒன்றிணைத்து ரசித்து படிக்கும்படி நூலாசிரியர் ஒப்பீடு செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *