தமிழ் மகன் எழுதிய அமரர் சுஜாதா
தமிழ் மகன் எழுதிய “அமரர் சுஜாதா” , நாதன் பதிப்பகம், 72/43, கவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 24; விலை ரூ. 120. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-1.html
அட்டைப் படத்தைப் பார்த்தால், சுஜாதா எழுதிய அறிவியல் புனை கதைகளை எழுத்தாளர் தமிழ் மகன் தொகுத்துள்ளார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் அப்படியல்ல. சுஜாதாவைப் பின்பற்றி, தமிழ் மகன் எழுதிய அறிவியல் புனைகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு கதையின் பெயர் அமரர் சுஜாதா. அந்தப்பெயரையே புத்தகத்துக்குத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். சுஜாதா பாணியில் எழுதுவது என்பது மிக்கடினம். அந்தக் கடினமான பணியில் தமிழ் மகன் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுக்கள். நன்றி: தினத்தந்தி, 6.3.2013.
—–
தமிழர் வரலாறு , தேவ.பேரின்பன்தமிழர், அலைகள் வெளியீட்டகம், யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24, பக். 172, விலை ரூ. 110.
வரலாறு என்பது இதுவரை, தமிழர், தமிழர் நிலம், போர், தமிழக அரசியல் பொருளாதார, சமூக மாற்றங்கள் குறித்த கருத்தியல்களை முன்வைத்தே பேசப்பட்டு வந்தன. இதில் விதி விலக்காக மதம் சார்ந்த வரலாற்றியல் தமிழகத்தில் வேரூன்றவில்லை. ஆனால் சாதிய அமைப்புதான் மன்னர்கள் காலத்திலாகட்டும் மக்கள் மேல் தங்கள் ஆதிக்கத்தை காலூன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இந்த சாதிய மத வரலாறுககளைத் தாண்டி, மாறுதலைகளைப் பேசுவது வரலாறுகளைத் தாண்டி, உற்பத்தி முறைகளில் ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பேசுவது வராலாறு என்ற ஒவ்வொரு காலக்கட்டத்தில் அவை புதிய புதிய முற்போக்கு மரபை உருவாக்குவதில் எப்போதும் ஒரு தேடலில் இருந்திருக்கிறது சங்க கலத்திற்கு முந்தைய காலம் முதல் பாரதி காலம் வரையிலான ஒரு வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ள உதவும் நூல் இது. நன்றி: குமுதம், 13.3.2013.
—–
தங்கதின் விலை ஏறுகிறதா? ஏமாற்றுகிறதா? க. மாரிக்கனி, ஒருலகம் பதிப்பகம், 75, முதல் மாடி, லேக்வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33, பக்கம்: 56, விலை ரூ. 60.
இந்தியர்களுக்கு இருக்கும் தங்கத்தின் மீதான மோகம் ஆபத்தானது’ என்றுதான் இந்தியன் ரிசர்வ் வங்கி பல காலமாகச் சொல்லி வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் அந்த மோகம் கூடுவதற்குக் காரணம்,நம் நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற பாதுகாப்பை வேறு முதலீடுகள் தருவதில்லை என்ற பயம்தான் காரணம். சமீபகாலமாக தங்கத்தின் விலை ஏற்றத்தைக் கண்ட மக்கள் இனி தங்கத்தின் விலை இந்தியர்களை எப்படி ஏமாற்றுகிறது, அதிலிருந்தது நம்மைத் தக்க வைப்பது எப்படி, தங்கத்தை வாங்கும் நமக்கு அதன் விலை மதிப்பு குறித்த புரிதல் இருக்க வெண்டும் என்பதை விவரிக்கும் நூல் இது. – இரா.மணிகண்டன். நன்றி: குமுதம் , 13.3.2013.