திருவள்ளுவர் திருவுள்ளம்
திருவள்ளுவர் திருவுள்ளம், பெருவெளிராமன், கணபதி பதிப்பகம், பக். 144.
திருக்குறளில் வீடு பேறு பற்றிச் சொல்லப்படவில்லை என்னும் கருத்தை மாற்றி, ஆதிபகவானை அறிதலே வீடு பேற்றை நல்கும் என்று நூலைத் தொடங்கியுள்ளார். பாயிரம் திருவள்ளுவர் எழுதவில்லை என்ற கருத்தையும், வன்மையாக மறுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் திருவுள்ளத்தை ஊடுருவி பல குறட்பாக்களுக்கான நுண் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கிய நூல்கள், தமிழ் மற்றும் வட மொழியில் உள்ள ஆன்மிக நூல்கள் பலவற்றின் துணையும் கொண்டு, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு நூலறிவும், வேதம், ஆகம அறிவும் மிக்க ஆசிரியரின் பாயிர உரையே நூலின் பாதி பக்கங்களை ஆட்கொண்டுள்ளது. திருக்குறளை மட்டுமல்லாது, பல்வேறு சாத்திர நூல்களைப் படித்து நிறைவு ஏற்படுவது உறுதி. கடவுள் வாழ்த்து (10 குறள்) மட்டுமே இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. -கவிக்கோ ஞானச்செல்வன்.
—-
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள், கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை 641001, பக். 184, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-102-6.html
கருத்து முத்துக்கள் நிறைந்த இலக்கியப்பேழை. விண்மீன்களும் நானும், ஆசானும் மாணவனும், அவற்றில் நான் இறைவனின் பேரொளியைக் காண்கிறேன், நானொரு வெறும் களிமண் பொம்மை என்பதை நான் அவற்றின் மூலம் உணர்கிறான். என்றாலும் எனது பெருமை, கடவுளின் அருளால் அமைவது. என் உருவம் அவன் உருவம். மனிதர்கள் வானத்தைக் கண்களால் பார்க்கின்றனர். அதனால்தான் அவர்களால் விண்மீன்களைப் பார்க்க முடிவதில்லை. விண்மீன்களை அடக்கமான இதயம் கொண்டு பார்க்க வேண்டும். மரியாதையான மவுனத்துடன் பார்க்க வேண்டும் என்கிறார் மிகெய்ல் நைமி. சந்தரத் தமிழ் நடை. ஹேட்ஸ் ஆப் டு புவியரசு. -எஸ். குரு. நன்றி: தினமலர், 24/11/13.