துளி விஷம்
துளி விஷம், வாதினி, 19-29, ராணி அண்ணாநகர், பி.டி. ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ.
விதவிதமான கதைகள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலாசிரியர் ஆனந்த் ராகவ், ஒரு நிருபர். ஓவியம்போல் எழுத்தில் வரையத் தெரிந்த நிருபர். கண்டதும், கேட்டதும், பட்டதும்தான் கதைகளாகின்றன என்றபோதும் ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்தக் கொள்ளும் கோணங்களம் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை. கிளர்ச்சியுறச் செய்யாத, அதே சமயம் ரசனையுடன் கவனிக்கத் தூண்டுபவை. எழுத்தில் மிகை இல்லை. பூசி மெழுகல் இல்லை. எளிமையே அழகு என்பதில் ஆழமான நம்பிக்கை, எனவே இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 சிறுகதைகளும் நேரடியாக வாசகர்களுடன் பேசும்.
—-
கோயிலுக்குப் போறீங்களா?, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம் சென்னை 49, விலை 90ரூ.
இந்து மத கோவில்கள் தொடர்பான ஒவ்வொரு அமைப்பும் எப்படி இருக்கும்? அதற்கான காரணம் என்ன? வழிபாடுகள் செய்வது எப்படி? மற்றும் புண்ணிய தீர்த்தம், குல தெய்வம் ஆகியவை பற்றிய தகவல்கள் நிறைந்துள்ளன.
—-
உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே, குருபிரியா, ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை 29, விலை 50ரூ.
குழந்தைகளின் மன நிலைகளை புரிந்து அதற்கேற்ப வளர்க்க அறிவுரை கூறும் நூல். நன்றி: தினத்தந்தி,6/11/13