தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும்

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும், முனைவர்ச. கணபதிராமன், பூங்குன்றன் பதிப்பகம், விலை 50ரூ.

தென்காசி கோபுரம் பற்றி அரிய புத்தகம் தென்காசி கோவிலில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சிதைந்துபோய், மொட்டை கோபுரமாக நின்றது. புதிய கோபுரம் கட்ட பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. முடிவில், ராஜகோபுரம் கட்டும் பணியை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவில் 178அடி உயர ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். 25/6/1990ல் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்ச்சியை அழகிய தமிழில் விவரிக்கும் முனைவர் ச. கணபதிராமன், கோவில் கோபுரம் சிதைந்து போனது பற்றி ஆராய்ச்சிகள் செய்து புதிய தகவலை தெரிவிக்கிறார். தீகோளினால் கோபுரம் சிதைந்துபோனதாகத்தான் பொதுவாக கூறப்பட்டு வந்தது. கி.பி. 1792க்கு பின்னரும், கி.பி. 1824க்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில், பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்ட பகையாலும், வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சியாலும், உட்பகையாலும், ஆவணங்களை அழித்திட தென்காசி கோபுரத்தில் தீ வைக்கப்பட்டதாக ஆதாரங்கள் மூலமாகத் தெரியவருவதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *