நல்ல நிலம்
நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ.
வாழ்ந்த மண்ணின் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்ப்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறித் இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து வந்து, அவனை ஏங்கித் தவிக்க வைக்கிறது. கி.பி. 1895-1986 தொடங்கியது கதை. கீழத்தஞ்சையின் 100 ஆண்டு கால வரலாற்றைச் சுற்றி சுழல்கிறது. இதில் வரும் நிகழ்வுகளும் அவற்றின் சரித்திர நாயகர்களும் நிஜம். விறுவிறுப்பான நடையில், அருமையாக இந்தப் புதினத்தைப் படைத்திருக்கிறார் பாவைசந்திரன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
மைக்ரோசாப்ட் வேர்ட், காம்கேர் கே. புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 235ரூ.
கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. நூலை முழுமையாக படித்தால் ‘வேர்ட்’ல் சிறப்பாக பணியாற்ற முடியும். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.