பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.க. இளங்கோ, பாரி நிலையம், 88/184, பிராட்வே, சென்னை 108, பக். 488, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-595-2.html

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி, பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம். நீதிகேது-இன்னும் படிக்க வைக்க வேண்டும். மங்கை-கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும்? கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு வேண்டுவது அன்பு. பின்பு? வேறு ஒன்றும் வேண்டாமா? பெண்கள் அரசு செய்வது விரசமா? போர் செய்யட்டுமே யார் வேண்டாம் என்பார்? காவியம் வரைந்தால் பாவி என்பார்களா? ஓவியம் வரைந்தால் ஒப்பாதா உலகம்? தொழில் புரிந்தால் எழில் போய்விடுமா? மங்கையர்க்கரசி, அரிவையர் அன்பு செய்யவும் கல்வி வேண்டும். மங்கை-அவளை மணக்க வரும் அரச குமாரர்கள் அஞ்சுவார்கள். அவள் அதிகம் படித்தால். நீதி-படிக்காதவன் அஞ்சுவது சகஜம் தானே? அன்றியும் எனக்குப் பின் இந்நாட்டை ஆள்பவள் என்மகள் அல்லவா? பாரதிதாசனின் திரைத்தமிழ் நம்மைப் பரவசப்படுத்துகிறது. -எஸ். குரு.  

—-

 

ஜென்னல், சத்குரு, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை.

ஜென் கதைகள் மிகவும் பிரபலமானவை. பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் மேற்கோள் காட்டிப் பேசவும் எழுதவும் பெரிதும் ஜென் கதைகளையே தேர்வு செய்வர். இவர்களின் மேற்கோள்களிலிருந்து, ஜென் கதைகளின் நுட்பமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டோம் என கூற முடியாது. மிகச் சிறந்த ஆன்மிக சிந்தனையாளரான, சத்குரு ஜென் கதைகளுடன் அதன் ஆழமான, உண்மையான உள்அர்த்தத்தையும் விளக்கிக் கூறியுள்ளவற்றைத் தொகுத்து, தயாரிக்கப்பட்டுள்ள நூல் இது. எழுத்து இரட்டையர்களான சுபாவின் எழுத்தாக்கத்தில், ஜென் கதைகளைப் பற்றிய மேலும் பல தவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் நூல். -ஜனகன். நன்றி: தினமலர், 2/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *