போட்டுத்தள்ளு

போட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ.

தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதிகயாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளரை நீங்கள் கவர வேண்டும். உங்கள் பிராண்ட் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார். வணிக இலக்கியப் பெக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 28/9/2014.  

—-

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 88, விலை 40ரூ.

நீங்கள் பின்பற்றாத எதையும் அறிவுரைகளாக கூற வேண்டாம் என்பதை எப்போதும் நான் கடைப்பிடித்து வருபவன் என்கிறார் முனைவர் நா. சங்கரராமன். இதுபோன்ற பல தத்துவ கருத்துக்களை உள்ளடக்கி இவர் எழுதியுள்ள சிறு கையடக்க புத்தகம் நம்பிக்கை நாட்காட்டி. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல கருத்துக்கள் தினமும், அலைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்திகளும், முகநூலில் இடும் பதிவுகள்தான். அவற்றை தொகுத்து அளித்துள்ளார் ஆசிரியர். பன்னிரு மாதங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு கருத்தாக இவற்றை சுவைபட சிந்திக்கும்படி பயனுள்ளதாக எழுதியுள்ளார். ‘மனதிற்கு பிடித்தவர்களோடு பேசுங்கள் மரண வலிகூட, மரணித்துவிடும் தேனீரின் சுவை கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவது இல்லை தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம் என்பது போன்ற கருத்துக்களின் பெட்டகமாய் வெளிவந்துள்ள இப்புத்தகம், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தருகிறது. -கவின். நன்றி: தினமலர், 28/9/2014.

Leave a Reply

Your email address will not be published.