மனசே மருந்து

மனசே மருந்து, தனலெட்சுமி பதிப்பகம், எஸ். 17, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.

மனதின் பல்வேறு இயல்புகள், ஆற்றல்கள் அந்த ஆற்றலை ஒருமுகப்படுத்தி பயன்கொள்ளும் முறை முதலான பலவும் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மனநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், மருந்துகளாலும், மருத்துவர்களாலும் குணப்படுத்த இயலாத பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களை சிறந்த மனநலமுள்ளவர்களாக, செம்மையான மனிதர்களாக ஹிப்னோ தெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. எவ்வளவு நாள்பட்ட மனநோயானாலும் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை, உள்ளம் குளிரும் ஒரு உத்திரவாதத்தை மருந்தில்லா மருத்துவம் ஹிப்னோ தெரபி சிகிச்சை மூலம் அளிக்க முடியும் என்கிறார் நூலாசிரியர் டாக்டர் வேதமாலிகா. மனநலம் பாதிப்பின்றி வாழ, மனம் வெளுக்கும் மார்க்கத்தை அடையாளம் காட்டும் நூல் எனலாம்.  

—-

 

ஆமை காத்த புதையல், எஸ். சேஷாத்திரி, தென்றல் நிலையம், 12பி, மேலசன்னதி, சிதம்பரம் 608001, விலை 40ரூ.

கொடிது, கொடிது இளமையில் கைம்பெண் கோலம் கொடிது. அதனிலும் கொடிது கன்னிப்பருவத்தின் கைம்பெண் கோலம் கொடிது என்ற உயரிய தத்துவத்தில் விதவையரின் வாழ்வு குறித்து எழுதப்பட்ட நூல் ஆமை காத்த புதையல். கைம்பெண்ணும் ஒரு கலைமகளே மற்றும் கைம்பெண் வாழ்க்கைக் கடலும் பாற்கடலே இதுபோன்ற வரிகள் மனதை தொடுவதாக உள்ளன. நன்றி: தினத்தந்தி,6/11/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *