முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு, ஜி. விஜயபத்மா, விகடன் பிரசுரம், பக். 175, விலை 115ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-233-6.html 1790ம் ஆண்டு, ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான், முதன்முதலாக, முல்லை பெரியாற்றில், அணை கட்டுவது குறித்து சிந்தித்தவர். அதையடுத்து, 1876-78ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சென்னை மாகாணப் பெரும்பஞ்சம் அல்லது தாது வருடப் பஞ்சம்தான், பிரிட்டிஷ்காரர்களை, முல்லை பெரியாறு அணை கட்டுவதை துரிதப்படுத்தியது என, ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். கடந்த 1807ம் ஆண்டு துவங்கி 1870ம் ஆண்டு வரை ஜேம்ஸ் கார்ட்வெல், கேப்டன் வார்ட்ஸ், காட்சன், மேஜர் ரைவ்ஸ் ஆகியோர், அணை கட்டுவது குறித்து பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். கடந்த, 1870ம் ஆண்டு, பென்னிகுயிக்கை, அணை கட்டுமான பணி தலைமை பொறியாளராக, பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிவித்ததையடுத்து, அணை கட்டுமான பணிகள் ஜரூராக துவங்கின. பென்னி குயிக் எழுதிய பெரியாறு போக்கை மாற்றும் திட்டம் என்ற, 33 பக்க அறிக்கை, ரோஸ்கோ ஆலன் எழுதிய பெரியாறு சுரங்கம்-பார்க்கர் என்ற 20 பக்க அறிக்கையும், தமிழில் தரப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. மேலும் தேவையான படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் விறுவிறுப்பான மொழிநடை, புத்தகத்தை கீழே வைக்க விடவில்லை. ‘கற்களை அடுக்கும் வரை வேலையாட்கள், கால்களால் சுண்ணாம்புக் கலவையை மிதித்தபடியே இருப்பார்கள். காலால் மிதிக்க மிதிக்க, அதன் ஒட்டும்தன்மை மிகவும் உறுதியாகவும், மிருதுவாகவும் மாறிவிடும். இந்தியக் கொத்தனார்களின் இந்தப் பழமையான, பாரம்பரிய கட்டடக்கலை குறித்து பிரிட்டிஷ் பொறியாளர்கள் அனைவரும் மிகவும் வியந்துபோனோம். -பென்னிகுயிக்(பக். 125). நன்றி: தினமலர், 22/6/2014.  

—-

சுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா? சூழலா?, பூபதி, ஸ்ரீகாந்த், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

தன்னம்பிக்கை ஊட்டி வெற்றிக்கு வழிகாட்டும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *