ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ.
உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. அதாவது ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? அதற்கு முன் ஸ்பெக்ட்ரம் பற்றி புரிந்துகொள்வதற்கான அறிவியல் விளக்கம். இந்த ஸ்பெக்ட்ரம் எப்படி பங்கீடு செய்யப்படுகிறது? ஏலம் எப்படி விடப்படுகிறது? அதில் ஊழலுக்கான சாத்தியங்கள் எங்கே இருந்து வருகின்றன? இதில் அரசியல்வாதிகளுக்கும், தொழில் துறையினருக்கும் இடையே எப்படி ஒப்பந்தம் உருவாகிறது? இந்த ஊழல் குறித்து சி.ஏ.ஜி. ரிப்போர்ட் என்ன சொல்கிறது? உண்மையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதா, இல்லையா… இப்படி பல தகவல்களை இந்நூல் புள்ளி விவரங்களோடு விளக்குகிறது. – பரக்கத் நன்றி: துக்ளக் 12-10-2011