ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50.

“வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் பாய்ந்து வருகிறது. கவிதைக்கான நடையில் ஹைக்கூ பாதிப்பு அதிகம்.  

 

மழை வேலி, சந்திரா மனோகரன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 24, பக்: 163, விலை: ரூ. 140.

இது நல்ல கதை, இது கெட்ட கதை என்ற வரையறையை யாரும் கட்டம் போட்டு சொல்ல முடியாது. ஆனால் வாசகனை கதைச் சம்பவங்களோடு / பாத்திரங்களோடு பயணிக்க வைத்துவிட்டால், அதுவே சிறந்த கதை. அந்த சிறந்த கதைகளைத்தான் சந்திரா மனோகர் ‘மழைவேலி’ தொகுப்பில் கொடுத்திருக்கிறார். ‘திருமணங்கள் காம்பெளண்ட் சுவரோரம் நிச்சயிக்கப்படுகின்றன’ போன்ற நீண்ட தலைப்புகளைக் கொண்ட சுவையான கதைகளும் சரி, ‘மூஞ்சி’ என்ற சிறு தலைப்புகளில் வரும் கதைகளும் சரி, ஒரு நேர்கோட்டில் மனித நேயத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும்படி பார்த்துக்கொள்வது ஆசிரியரின் தனிச்சிறப்பாக உள்ளது. அதனாலேயே இக்கதைகள் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகின்றன.   நன்றி: குமுதம் (10.4.2013).

Leave a Reply

Your email address will not be published.