தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து, மீள்பார்வை+சீர்திருத்தம்=தமிழி 2014, சாரதா பதிப்பகம், சென்னை 101, விலை 80ரூ.

தமிழர்கள் காலந்தோறும் வரிவடிவம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும். கற்பிக்கவும் எழுதுவதற்கும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலப் பல மாற்றங்களைச் செய்துகொண்டே வந்தனர். நவீன காலத்தில் அவை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்பட்டது. தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காக நாம் எடுத்துக்கொண்ட காலம் அதிகம். அதே வரிசையில் இந்நூல் ஆசிரியர் 247 ஒலிகளையும் வெறும் 24 எழுத்துக்களில் எழுதிக்காட்டுகிறார். ஆங்கில எழுத்து முறைக்கு நிகராக தமிழுக்கும் ஒரு எழுத்து முறையை எதிர்காலத்திற்காக வழங்கியிருக்கிறார். கணினி யுகத்தில் இது தேவையான முயற்சியே. நன்றி: குமுதம், 21/5/2014.  

—-

புத்தரும் குருநானக்கும், முக்தா வீ. சீனிவாசன், முக்தாவின் திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, பக். 48, விலை 25ரூ.

மனிதனுக்கு ஆசை அதிகமாக அதிகமாக மூடநம்பிக்கையும் அதிகமாகிவிடும். அதனால் பயனற்ற சடங்குகள், விரும்பத்தகாத பழக்க வழக்கங்களால் இருளில் வீழ்ந்து தன்னையும் தன் சந்ததியையும் பொய்மை, கொண்டு மூடியே வைத்திருக்கிறாள். இந்த இருளை, பொய்மையை, மூட நம்பிக்கையை உடைத்தெறிந்து உலகுக்கு வெளிச்சம் காட்ட தோன்றிய மகான்கள்தான் புத்தரும் குருநானக்கும் என்பதை விளக்கும் சிறிய நூல் இது. சாதிசமய பிரிவினையை மாய்த்து இறைவனை அவன் உண்மை நிலையில் விளக்கி நமக்கு நல்வழிகாட்டிய மகா ஞானிகளைப் பற்றி படிக்கப் படிக்க நமக்குள் உள்ள இருள் விலகுகிறது. நன்றி: குமுதம், 21/5/2014.

Leave a Reply

Your email address will not be published.