108 திவ்ய தேசம் திருயாத்திரை

108 திவ்ய தேசம் திருயாத்திரை, சூலூர் கலைப்பித்தன், கலைப்பித்தன் இலக்கிய, இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை, 33, பழனியப்பத் தேவர் சந்து, சூலூர் அஞ்சல், கோயமுத்தூர் 641402, விலை 300ரூ.

இந்தியாவில் உள்ள 108 திவ்ய தேசங்கள் பற்றிய அருமையான குறிப்புகளுடன் இந்த கோவில்கள் அமைந்து இருக்கும் ஒவ்வொரு ஊருக்கும் எப்படி செல்வது? எங்கே தங்குவது? போன்ற பயனுள்ள குறிப்புகளையும் தாங்கி இருக்கும் இந்த புத்தகம் 108 திவ்ய தேச யாத்திரை செல்ல முடியாதவர்களுக்கும், செல்ல விரும்புகிறவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி, 9/10/13.  

—-

 

வட்டி ஓர் உயிர்க்கொல்லி, நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ.

வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மை சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர் கொல்லி நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளை கூறியுள்ளது. இதை பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கி கூறி இருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 4/4/2012.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *